Tuesday, December 21, 2010
Thursday, December 9, 2010
ஹைக்கூ கவிதை!!!
அன்று நான் என் காதலியின் பெயரை பச்சை குத்திய தடயத்தை தடவி பார்த்து, இன்று என் மகள் கேட்கிறாள் "என் மீது அவ்வளவு பாசமா அப்பா" என்று...
தயவுசெய்து பெண்களை மலருடன் ஒப்பீடாதீர்....ஏன் என்றாள் மலர் வாடுமே தவிர யாரையும் வாட வைப்பதில்லை!!
அவள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்ததும் என் மனதை கல்லாக்கிக்கொண்டேன்.... ஆனால் அதிலும் சிற்பமாய் அவள்!!
என்னை பிடிக்கவில்லை என்ற வார்த்தைகூட அழகாகத்தான் இருந்தது...அவள் உதடுகள் உச்சரிக்கும்போது!!
நீ விடும் பட்டம்கூட உயரத்த்ில் பறக்க மறுக்கிறது....யாருக்குத்தான் மனசு வரும் உன்னை விட்டு விலகி செல்ல!!
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை...ஆனாலும் பார்த்தேன்...அந்த கிளியின் ஐந்து நிமிட விடுதலைக்காக!!
மேகமூட்டம் போல் அவள் நினைவுகள்.... எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்...என் கண்ணில்!!
வெப்காம் பார்த்து அழுகை நிறுத்தும் குழந்தை....சிரித்தபடியே அழும் ஆன்சைட் அப்பா!!
Subscribe to:
Posts (Atom)