Wednesday, March 5, 2008
மென்பொருள் கவிதை!!!
எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடை தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசைபாடும் குருவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்று ஏகத்த்ூடன் காத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று எங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின்,"மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு......
இங்கனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன்,
(பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொழைத்த வல்லுனன்)
Labels:
Interesting
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment